விஷாலின் கல்லூரி கதைகள் - 7

 விஷால் ஹாலில் சில பேர் பேசிக்கொண்டு வருவதை கேட்டான். அவன் சுவருக்கு சுவற்றை ஆற்றிய படி சென்று அமர்ந்தான், “இது ஒரு கனவுதான், நான் விரைவில் எழுந்துக்கணும்” என்று நினைத்தான். சில நிமிடங்களுக்குப் பிறகு, அவனுக்குப் பழக்கமான முகங்கள் வந்தன — ராகுல், நேஹா மற்றும் சரண்யா. 


அவர்கள் அனைவரும் விஷாலுக்கு hi சொன்னார்கள். நேஹா முதலாவதாக அவனிடம் வந்தாள். அவள் அவனிடம் வந்து, அவனது முகத்தில் விழுந்த ஒரு முடியை பிடித்து, “ஏய், இன்று நீ ponytail சரியாக கட்டளையா? உன் முடி முகத்தில் எப்படி விழுந்திருச்சுபாரு,” என்றாள்.


அவள் பின்னர் அவன் தலைக்கு பின்னால் பார்த்தாள். அவன் முடியில் இருக்கும் golden claw clip-ஐக் கண்டதும் சிரிக்கத் தொடங்கினாள். ராகுலும் சரண்யாவும் என்ன நடக்கிறது என்று புரியாமல், அவளோடு வந்து விசாரித்தனர். நேஹா, விஷாலை தலை திருப்பச் செய்து, அந்த அழகான golden claw clip-ஐ அனைவருக்கும் காட்டினாள். மூவரும் சிரிக்கத் தொடங்கினர்.


சரண்யா, “நேத்து நான் செஞ்ச hairstyle உனக்கு இவ்வளவு பிடிச்சிருக்கா?” என்றாள்.

ராகுல், “ஏய், machan, நீ black hair band தவிர வேறு எல்லாத்தையும் girly-nu சொல்லிட்டு இருந்தியே, எப்போ மனசு மாத்திகிட்டியா?” என்றான்.


விஷால் மிகவும் வெட்கப்பட்டான். அவன் தலை கீழே வைத்துக் கொண்டு, வீட்டிலுள்ள நிலைமையை விளக்க ஆரம்பித்தான். அவன் உண்மையில் ஒரு புதிதாக சமைஞ்ச பெண்ணை போல தோன்றினான்.


ராகுல் விஷாலின் நிலையை கேட்டபிறகு, “sorry da machan, நிலைமை தெரியாமல் tease பண்ணிட்டேன்,” என்றான். அப்போது நேஹா இடையீடு செய்து, “sorry ah? என்ன sorry ராகுல்? ஒரு ஆண் இப்படி முடி கட்டிக்கொண்டால் என்ன பிரச்சனை? நீண்ட முடி பெண்களுக்கு மட்டும் இருக்கணும் என்று இல்ல ல, different hairstyles மட்டும் பெண்களுக்கே இருக்கணும் என்ற விதி இல்ல,” என்றாள்.


சரண்யா ஒப்புக் கொண்டு, “நேஹா சரியாய் தான் சொல்றா, விஷால், நீ இதனால் embarrassed ஆக வேண்டாம். உன் அம்மா விரும்பும் விதமாக முடியை கட்டிக்கோ,அவங்களே கொஞ்ச நாள்ல மனச மாதிக்குவாங்க. நான் உன்னுக்காக ponytail college-க்கு வரும் போது கட்டி விடுறன், வீட்டுக்கு போகும் போது உன் அம்மா செஞ்சது போலவே திரும்பி மாத்திடுறேன்,” என்றாள்.


விஷால் சரண்யாவின் தீர்வை கேட்டதில் மகிழ்ச்சியடைந்தான். அவன் அதற்கும் ஒப்புக்கொண்டான். சரண்யா விஷாலின் பக்கத்தில் bench-ல் உட்கார்ந்து, claw clip எடுத்துக் கொண்டு அவனது முடியை comb செய்து சிறிது சீரமைத்தாள். பிறகு அவன் முடியை bunch செய்து, clip-ஐ மீண்டும் pin செய்து, low ponytail-ஆ வைத்தாள்.



“இன்று black hair band இல்லாததால், இந்த golden clip-ஆ வெச்சு adjust பண்ணிக்கோ.” என்றாள். விஷால் கொஞ்சம் நிம்மதியாக உணர்ந்தான். அப்போதுதான் class-க்கு செல்லத் தொடங்கினர்.


இது கடைசி period. யாரும் clip-ஐ கவனிக்கவில்லை, விஷாலின் நண்பர்கள் தவிர. விஷால் சந்தோஷமாக இருந்தான். Bell ஒலித்ததும், அவன் நண்பர்களை meet பண்ணாமல் classroom-ஐ விட்டு வெளியேறினான்; Lakshmi Ma’am-ஐ சந்திக்க விரும்பவில்லை. அவன் helmet போட்டுக்கிட்டு, Scooty Pep-ல் ஏறி வீட்டுக்கு சென்றான்.


சரண்யா, நேஹா, ராகுல் அவனை தேடி parking area-க்கு வந்தனர். Scooty இல்லை. சரண்யா, “அந்த idiot விஷால், ponytail ஓடவே வீட்டுக்கு கெளம்பிட்டான்” என்றாள். நேஹா சிரித்து, “நாளை விஷாலின் அம்மா அவனுக்கு ஒரு அழகான ஜடை பின்னி காலேஜ்க்கு அனுப்ப போறாங்க ” என்றாள். ராகுல் சிரித்து, “Lakshmi Ma’am-உடைய dream விரைவில் சாத்தியமாகும்.” என்றான். மூவரும் சிரித்தனர்.


விஷால் வீட்டில் நுழைந்து அம்மாவை சந்தித்தான். வாசல் முன்னால் bend செய்து shoes மற்றும் socks அகற்றினான். அப்போதுதான் சீதா அவனது ponytail பார்த்து கோபம் அடைந்தார். அவன் ponytail-ஐ முன் இழுத்து,

“என்ன தைரியம் இருந்த முதல் நாளே என்ன மதிக்காம எப்படி பண்ணுவ” என்றார்.


விஷால் தன் தவறை உணர்ந்து, தலையை கீழே தொங்க போட்டான். சீதா, “இனிமேல் உனக்கு hairstyle நா அது ஒத்தை ஜடை இல்ல ரெட்டை ஜடை தான். அதுவும் தெனமும் நான் கட்டி விட மாட்டேன், நீயே அழகா வகுடெடுத்து தலை சீவி ஜடை பின்ன கத்துக்க போற darling.” என்றார். விஷால் அதிர்ச்சி தாங்க முடியாமல் நின்றான்.

Comments

  1. கதை நன்றாக உள்ளது தொடர்ந்து எழுதுங்கள் நியூ girly hair style try பண்ணுக

    ReplyDelete
  2. Write Continuously it's Beautiful Story...

    ReplyDelete
  3. Next part please

    ReplyDelete
  4. Next part please update

    ReplyDelete
  5. Next part plz 🙏

    ReplyDelete
  6. Next part please

    ReplyDelete

Post a Comment