விஷாலின் கல்லூரி கதைகள் - 5

 நாள் முடிவில் விஷால் தன் நண்பர்களுக்கு bye சொல்லி, தன் பழைய pink Scooty Pep-ஐ எடுத்துக் கொண்டு வீட்டுக்குப் புறப்பட்டான். அந்த Scooty Pep முதலில் அவன் அம்மா தான் பயன்படுத்தியது. விஷாலின் அம்மாவின் பெயர் சீதா. அவர் ஒரு IT கம்பெனியில் manager-ஆக வேலை செய்கிறார். விஷால் computer science சார்ந்த degree-யை தேர்வு செய்ய காரணம் அவன் அம்மாதான்; அம்மாவைப் போல ஆக வேண்டும் என்பதே அவன் கனவு. மேலும், விஷால் முடியை நீளமாக வளர்க்க தொடங்கியதற்கும் முக்கிய காரணம் அவன்  அம்மாதான். பல அம்மாக்கள் போல “ஆண் குழந்தை முடி வளர்த்துக்கூடாது” என்று சொல்லாமல், ஒரு மகளுக்கு செய்வது போலத்தான் விஷாலின் முடியை சீதா பராமரித்தார். விஷால் சிறுவயதிலேயே தன் அப்பாவை இழந்துவிட்டதால், அவனுக்கு அவன் அம்மாதான் உலகமே.


விஷால் வீட்டுக்குச் சென்று ஹாலில் உள்ள சொஃபாவில் படுத்துக்கொண்டான். அந்த சத்தத்தைக் கேட்டு வீட்டுக்குள் இருந்து சீதா வெளியே வந்தார். அன்று அவர் Work From Home செய்து கொண்டிருந்தார். விஷால் இன்னும் socks அணிந்தபடியே sofa-வில் படுத்திருப்பதைப் பார்த்ததும், உடனே அவன் காது பிடித்து உட்கார வைத்து விட்டார். அப்போது தான் அவர் கண்களுக்கு அந்த புதிய blue butterfly claw clip பட்டது. அதைக் கண்டு அவர் ஆச்சரியப்பட்டார் — ஏனெனில் இதுவரைக்கும் அவர் வாங்கித் தந்த எந்த clip-யையும் விஷால் எப்போதும் “girly" என்று சொல்லி அணிய மறுப்பான், சில நேரங்களில் கோபப்பட்டும் விடுவான்.


சீதா கோபத்துடன், “இதென்ன நீ போட்டிருக்கே?” என்று கேட்டார். அப்போதுதான் சரண்யா போட்டுத் தந்த அந்த clip-ஐ இன்னும் அகற்றவில்லை என்பதை விஷால் நினைவுபட்டான். அவன் உடனே, “Ma… Saranya தந்தது… என் rubber band உடைஞ்சு போச்சு…” என்று விளக்கத் தொடங்கினான். ஆனால் சீதா கவனிக்கவில்லை.


“அப்படியா? சரண்யா தந்தா நீ போடுவியா? உன் சொந்த அம்மா வாங்கித் தந்தா ‘girly’ன்னு கத்துவியா? சரி, நாளை மாலை சரண்யாவையே கூப்பிடுறேன் — அவளை வைத்து உன் முடியை ரெட்டை ஜடை பின்னி ரிப்பன் கட்டி விட சொல்றேன். அப்புறம் நீ உன் ரெட்டை ஜடைகளை ஆட்டிக்கிட்டே சுற்றுகிறியா பார்ப்போம்!” என்று சீதா கூர்மையாகப் பேசினார்.


விஷால், “அப்படி இல்ல Ma…” என்றாலும், சீதா அமைதியாகவில்லை.


அவர் கட்டளையிட்டபடி,

“இப்போ இருந்து உனக்கு black rubber band வாங்கி குடுக்க மாட்டேன். வீட்டுல எவ்வளவு scrunchie, claw clip, banana clip, barrette இருக்கு. நாளை முதல் உன் முடியை நான் தான் comb பண்ணுவேன். boring rubber band வைத்து ponytail போட்டுட்டு போக முடியாது. நாள்தோறும் நான் தேர்வு பண்ணுற accessory-யே நீ போடணும். புரியுதா?” என்றார்.


அந்த நிலைமையில் எதுவும் செய்ய முடியாததால், விஷால் தலை ஆட்டி சம்மதித்தான்.


காலை Raaji Ma’am சொன்ன teasing இப்போ உண்மையாவப் போகுது என்ற உணர்வு அவனுக்கு வந்தது. நாளை கல்லூரி முழுக்க எவ்வளவு tease பண்ணுவாங்க என நினைத்துப் பார்த்ததும் தலை கீழே விழுந்தது.


அவன் அம்மா, “போய் fresh ஆகிட்டு வா,” என்றார். மாலை நேரங்களில் சீதா அவன் முடியை neatly comb செய்து ponytail போடுவார். ஆனால் இன்று அவர் ஒரு pink hair clip எடுத்துக்கொண்டு, “விஷால், இங்கே வா,” என்று அழைத்தார். என்ன நடக்கப் போகிறது என்பதெல்லாம் தெரிந்திருந்தாலும், அவன் அம்மாவுக்கு எதிர்த்துப் பேசாமல் அமைதியாக அவர்முன் தரையில் உட்கார்ந்தான்.





சீதா அவன் முடியை மிகவும் நன்றாகச் சீவி, அந்த pink hair clip-ஆ நடுவில pin செய்தார் — அது இன்று சரண்யா செய்ததுபோலவே இருந்தது. பின்னர் அவர் பாசமாக,

“என் கண்ணே பட்டுடும் போல இருக்கு… இப்போதான் லட்சணமா இருக்க.”

என்று சொன்னார்.


விஷால் ரொம்ப வெட்கப்பட்டான், ஆனால் எதுவும் சொல்லாமல் அமைதியாக இரவு உணவு சாப்பிட்டு தன் அறைக்கு சென்று படுத்தான். நாளை என்ன ஆகப்போகிறது என்ற கலக்கத்திலேயே அவன் இரவு முழுக்க சிந்தித்துக்கொண்டிருந்தான்.

Comments

  1. கதை நன்றாக உள்ளது தொடர்ந்து எழுதுங்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி தொடர்ந்து கதையை படித்து உங்கள் கருத்தை சொல்லுங்கள்.

      Delete
  2. Super story pa neraya elunthunga seekramae vishal jada pinni malliga poo vachukuratha paakanum nu wait pandrom

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக எனக்கும் அது தான் ஆசை விஷால் ஒத்தை ஜாடை மல்லிகை பூ வச்சுகிட்டு தான் வீட்டை விட்டு வெளியே வரணும்.

      Delete

Post a Comment