விஷாலின் கல்லூரி கதைகள் - 3

 விஷால் வகுப்பிற்கு வந்த போது, அவன் பத்து நிமிஷம் தாமதமாக வந்ததால் முதல் period ஏற்கனவே தொடங்கிவிட்டது. அந்த முதல் period Foundation Mathematics. அதை ராஜி மேடம் எடுத்துக் கொண்டிருந்தார், மிகவும் strict — ஒரு typical maths professor.


விஷால் classroom-ன் entrance-ல நின்றான். எதுவும் சொல்லாமல் அமைதியாக உள்ளே வர முயன்றான். வலது பக்கம், மூன்றாவது மற்றும் கடைசி வரிசையின் இரண்டாவது bench-ல் ராகுல் அமர்ந்திருந்தான். அதே bench-ல் நேகா மற்றும் சரண்யாவும் இருந்தார்கள். விஷாலைக் கண்டவுடன் மூவரும் சிரித்தார்கள்; ராஜி மேடம் class-க்கு லேட் வந்ததை விட்டுவிடமாட்டார் என்று அவர்களுக்கு தெரியும்.


ராஜி மேடம், விஷால் ஒளிந்து வர முயன்றதை பார்த்தார்.

“Vishal! Where do you think you are going?” என்று கடுமையாகக் கேட்டார்.

விஷால் மெதுவாக, “To my bench madam…” என்றான்.


அவருக்கு நம்ப முடியவில்லை.

“என் class-ல இவ்வளவு rebellious-ஆன பையனை நான் பார்த்ததே இல்லை. நீ எப்போதும் late! Foundation Mathematics எவ்வளவு முக்கியமான subject என்று தெரியுமா? உங்க syllabus-ல toughest subject இது தான்.”


விஷால், “Yes Ma’am, I know… மன்னிக்கவும், இனிமேல் late வரமாட்டேன்,” என்றான்.

அவர் அவனை bench-க்கு போகச் சொன்னார்.


விஷால் ராகுல் அருகே அமர்ந்தான்.

ராகுல், “Enna machi, late-ஆ?” என்று சிரித்து கேட்டான்.

விஷால், “எனக்கே தெரியும் da இனிமேல் சீக்கிரம் படுக்க போகணும்,” என்றான்.


அவன் திரும்பி நேகா, சரண்யாவைப் பார்த்தான்.

நேகா, “நீ நேரத்துக்கு வருவது தான் surprise da!” என்றாள்.

சரண்யா ஒத்துக்கொண்டு, “இன்னிக்கி entrance-ல யார் இருந்தாங்க?” என்று கேட்டாள்.


விஷால், “Lakshmi Madam.”

சரண்யா சிரித்து, “அவங்களுக்கு உன்னை ரொம்பப் பிடிக்கும், lucky da நீ.”

விஷால், “Lucky? அவங்க என் முடியை வைத்து ரொம்ப roast பண்ணினாங்க. நா ஜடை போட்டா girls-இக்கே jealous ஆகுமாம்.”


மூவரும் சிரித்தார்கள். நேகா அவன் முடியின் முனையை பிடித்து தன்னோட முடியோட ஒப்பிட்டு,

“பார், என்னை விட நீளமா இருக்கு! உன் Hair-க்கு competition கொடுக்குறது சரண்யாதான்,” என்றாள்.


சரண்யா,

“இன்னும் சில மாதங்களில் விஷாலின் முடி என் முடியை தாண்டிடும்; நான் regular-ஆ trim பண்ணுவேன், நம்ம மகாராணிக்கு அந்த பழக்கம்,” என்று சிரித்தாள்.

நேகா, “அப்போ விஷால் நம்ம college-லேயே longest hair வச்சிருக்க beauty தான்,” என்று கிண்டலிட்டாள்.


விஷால், “அட பாவிகளா, Lakshmi madam-க்கும் நீங்க தான் competition,” என்று சிரித்துக் கொண்டே முடியைக் நேஹா கையிலிருந்து இழுத்துக் கொண்டான்.


அதே நேரத்தில், ராஜி மேடம்,

“Vishal! Why are you disturbing my class?” என்று சத்தமாகக் கேட்டார்.

விஷால் “Sorry ma’am!” என்று சொன்னான், class தொடர்ந்தது.


Break Time


மூன்று periods முடிந்து 11:15 ஆனது. Class-ல ரொம்ப பேர் வெளியே போயிருந்தார்கள்.


ராகுல், “Finally break da! போகலாம் canteen-க்கு.”

விஷால், “ஆம், samosa சாப்பிடணும்!”

நேகா, “இந்த college-ல samosa bland-ஆ இருக்கும்!”

சரண்யா, “நேகா சொல்வது சரிதான், உனக்கு taste இல்லை.”


விஷால் சிரித்து,

“Well… இன்று நான் தான் உங்க bill pay பண்ண போறேன்…”


அவங்க மூவரும்,

“அப்படின்னா samosa ரொம்ப tasty!” என்று சிரித்தார்கள்.


அவர்கள் நடந்து கொண்டு இருந்தபோது, திடீரென்று snap — விஷாலின் ponytail தளர்ந்து விட்டது. அவன் முடி முகம் முழுவதும் விழுந்தது. அவன் அதை பின்னால் தள்ளி:

“Damn, என் hair tie உடஞ்சிடுச்சு.”


நேகா, “Spare இருக்கா?”

“இல்ல.”


சரண்யா bag-ல இருந்து ஒரு blue claw clip எடுத்து,

“இது வை,” என்றாள்.


விஷால்,

“claw clip? Too girly! நான் black rubber-bands தான் use பண்ணுவேன்!”


சரண்யா தலை அசைத்து,

“இத்தனை நீளமா முடி வைத்திருப்பவன், ஒரு தரவை கூட hair clip use பண்ணலையா? ரிப்பன் குடுத்தேனா இல்ல bow குடித்தேனா இது ஒரு claw clip தான். அதுவும் blue—உன் shirt-க்கு match ஆகும்.”


ராகுல்,

“Girly-na என்ன machi? உன் முடி girls-கிட்ட இர்ருக்கறதைவிட இவ்வளவு நீளமா இருக்கு.”


நேகா,

“இது இல்லனா, நாள் முழுக்க முடி முகத்தில விழும்.”


விஷால் சோர்ந்து,

“சரி… குடு. நான் ponytail போற்றுகிறேன்.” என்றான்.


சரண்யா நிறுத்தி,

“Ponytail? இவளோ அடர்த்தியான hair-ஐ இந்த tiny claw clip பிடிக்காது. முடியை bunch பண்ணி எடுத்து போடணும்.”


விஷால்,

“அய்யோ… Lakshmi Ma’am பார்க்கக்கூடாதே… life-long tease பண்ணுவாங்க.”


சரண்யா,

“உட்காரு, நான் செஞ்சு தர்றேன்.”


அவன் அமர்ந்தான். சரண்யா comb எடுத்து, முடியை நன்றாக 50 தடவை cவாரி tangles எடுத்தாள்.

விஷால், “Ouch… ouch…”


நேகா,

“சின்ன பொண்ணு மாதிரி react பண்ணாதே Vishal! முடி வளக்குறது கஷ்டம் இல்ல அத maintain பண்றது தான் கஷ்டம். அதனால தான் நான் short hair வச்சுருக்கேன்”


சரண்யா blue claw clip வைத்து முடியை பின்னாடி கட்டினால். அது அவனை ஒரு girl மாதிரி தான் காட்டியது. ராகுல் பின்புறத்தில் இருந்து photo எடுத்துக் காட்டினான். விஷாலுக்கு வெட்கமாக இருந்தாலும், வேறு வழியில்லாமல் accept பண்ணினான்.



விஷால்,

“நீங்க போங்க… நான் இன்னிக்கி வரல.”


மூவரும் சிரித்து கொண்டே அவன் கையை பிடித்து இழுத்தார்கள்.

ராகுல், “Bill pay பண்ணணும் da!”

நேகா, “நாங்கள் இருக்கோம் Vishal — யாரும் உன்ன எங்க முன்னாடி tease பண்ண மாட்டாங்க.”

Comments

  1. Please post the story regularly. Don’t take too long time.

    ReplyDelete
  2. Wow! ... Please 🙏 post regularly!.

    ReplyDelete

Post a Comment