இப்போது நிகழ்காலத்திற்கு வரும்போது, முதல் செமஸ்டர் தொடங்கி மூன்று மாதங்கள் ஆனது. விஷாலுக்கு நெருக்கமான மூன்று நண்பர்கள் இருந்தனர் — ராகுல், சரண்யா, நேஹா. ராகுல் உயரமாகவும், தசைகள் உடையவனாகவும் இருந்தான்; பல பெண்கள் கனவிலும் நினைப்பவரைப் போல. ஆனால் ராகுல் ஒருபோதும் சீன் போடமாட்டான்; எப்போதும் பணிவும், நல்ல மனசும் கொண்டவன். விஷாலுக்கு ஏதேனும் பிரச்சினை வந்தால் முதல் உதவிபுரிவவன் அவன்தான்.
சரண்யா ஒரு பாரம்பரிய தமிழ் பெண். எப்போதும் குர்த்திகளே அவள் அணிவாள். அவளுடைய நீண்ட கருப்பு முடி எப்போதும் ஒரு அழகான, இறுக்கமான ஜடை ஆக பின்னப்பட்டிருக்கும். அவள் தமிழ் படங்களில் வரும் அடுத்த வீட்டு பெண் போலத் தோன்றுவாள். சரண்யா அமைதியானவள், ஆனால் தேவையான நேரத்தில் தைரியமாகப் பேசக்கூடியவளும்.
நேஹா சரண்யாவுக்கு நேர்மாறானவள். அவள் உரத்த குரலில் பேசுபவள், தன்னம்பிக்கை நிறைந்தவள் — ஒரு typical modern Chennai girl. அவளுடைய முடி தோள்பட்டை வரையிலான short cut; பல பெண்கள் வைத்திருப்பது போல. யாருக்காவது பிடிக்கிறதா இல்லையா என்று கவலைப்படமாட்டாள்; தன் நம்பிக்கையைத் தைரியமாகச் சொல்வாள். சேர்ந்து இருக்கும்போது இந்த மூவர் ஒரே அணியாகப் பிரியாத நண்பர்கள்.
அது ஒரு மிகச் சூடான திங்கட்கிழமை காலை. வழக்கம்போல மாணவர்கள் எல்லாம் மனமில்லாமல் ஒன்றன்பின் ஒன்றாக கல்லூரிக்கு வந்துகொண்டிருந்தனர். துறையின் கட்டட நுழைவாயிலில் அந்த நாளுக்கான பொறுப்பு பேராசிரியர் மாணவர்களின் dress code சரியாக உள்ளதா, ID card அணிந்திருக்கிறார்களா என்று பரிசோதிப்பது ஒரு தினசரி நடைமுறை.
வழக்கம்போல விஷால் ஐந்து நிமிடம் தாமதமாகவே வந்தான் — சுமார் 9:05 மணி. அவனுக்கு அன்றைய துரதிர்ஷ்டம் என்னவென்றால், அந்த நாள் நுழைவாயிலில் நிற்பது பேராசிரியர் லட்சுமி.
விஷால் ஆழமாய் மூச்சுவிட்டான், லட்சுமி மேடம் இன்றும் அவனை கிண்டல் செய்வார் என்பதை உணர்ந்தான்.
அவள் உடனே, “Welcome my darling, ஏன் தாமதம்?” என்று கேட்டார்.
விஷால், “Ma’am, bus...”என்று சொல்லத் தொடங்க,
லட்சுமி அவனை நிறுத்திவிட்டு ,“Bus? அதுதான் reason ஆ? நானும் bus ல்தான் வந்தேன். அதுக்கு late ஆகக்கூடாது. சரி, உண்மையான reason என்னன்னு guess பண்ணலாமா? உன் நீளமான அழகான முடிதானே உன்னை தினமும் late ஆக்குறது?” என்று கிண்டலிட்டார்.
விஷால், “No ma’am, அது இல்லை நான்...” என்று சொல்ல, மீண்டும் அவள் அவனை நிறுத்தி, “சரி சரி, நீ பொய் சொல்லலாம். ஆனா ஒரு பெண்ணா எனக்கு தெரியும் — என் முடி உன்னோட முடியின் அரை நீளம்தான். அதை wash பண்ண, dry பண்ண, ஜடை பின்னி கொண்ட போட ஒரு மணி நேரம் ஆகுது. உன் மாதிரி நீளமான முடி இருந்தா என்ன ஆகும் என்று நெனைச்சுப்பாகவே முடியல.”
விஷால் சிரித்த முகத்தோடு, “ஆனா ma’am, நான் ஜடை பின்னி, உங்களைப் போல கொண்ட போட வேண்டியதில்லே.” என்றான்.
லட்சுமி மேலும் சிரித்துக்கொண்டே, “அப்படியா? ponytail போடறதுக்கே நீ தினமும் late ஆகுற. ஜடை பின்ன வேண்டியிருந்தா எவ்வளவு நேரமா ஆகும்!". என்று கலாய்த்தார்.
அவள் தொடர்ந்து, “எப்படியோ, ஒரு நாளாவது உன் முடியை முழுக்க ஜடை பின்னி வரணும் விஷால். அது எவ்வளவு அழகா இருக்கும் என்று பாக்கணும். உன் ஜடை எல்லா பொன்கள் ஜடைஐயும் வெக்கபடவைக்கும் னு bet வைக்கறேன்.”
விஷால் சிரிப்புடன், “Stop ma’am, blush ஆக வைக்காதீங்க.” என்று கிண்டலாக சொன்னான்.
லட்சுமி மேடம் சிரிச்சுட்டு, “சரி சரி, class போ.” என்று அனுப்பினார்.
மற்ற பேராசிரியர்கள் போல அவனை late அப்படின்னு mark செய்யவே இல்ல.
What took so long waiting for the story eagerly!. Though add some images between story related to story!. By the way Nice Continuation!.... Waiting eagerly for next part!.
ReplyDeleteI had no time between work, I'll try to upload more and I'll also try to add pictures, I tried finding them on google but wasn't so lucky.
DeleteOkay
DeletePlZ next part
ReplyDelete